Skip to main content

கேரளாவில் இன்று 111 பேருக்கு கொரோனா தொற்று : முதல்வர் பினராய் விஜயன் பேட்டி

திருவனந்தபுரம், கேரள முதல்வர் பினராய் விஜயன் திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று மிக அதிகமாக 111 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் நோயாளிகளின் எண்ணிக்கை 100ஐ கடப்பது இதுவே முதல் முறையாகும். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 50 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 48 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். 10 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவி உள்ளது.  சுகாதாரத்துறை ஊழியர்கள் 3 பேருக்கும் இன்று நோய் பரவியுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டர்களில் 25 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தையும், 10 பேர் தமிழ்நாட்டையும், 4 பேர் டெல்லியையும், தலா 3 பேர் கர்நாடகா மற்றும் ஆந்திராவையும், தலா ஒருவர் லட்சத்தீவு, ஹரியானா மற்றும் உத்திரபிரதேசம்  ஆகிய மாநிலங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.  இன்று 22 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 7 பேர் காசர்கோடு மாவட்டத்தையும்,  5 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 4 பேர் எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 40 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 18 பேர் மலப்புரம் மாவட்டத்தையும்,  11 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், 10 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 8 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 5 பேர் திருவனந்தபுரம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களையும், 4 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும்,  தலா 3 பேர் இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும், 2 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா ஒருவர் கோட்டயம் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று 3,597 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. தற்போது 973 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலாக 1,77,106 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில்  1,545 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 247 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சபரிமலையில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருபவர்களுக்கு மட்டுமே தரிசனத்துக்கு அனுமதி

 சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆன்லைன் மூலம் தரிசனத்துக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். ஒரே நேரத்தில் 50 பேர் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். சபரிமலை வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். பம்பை மற்றும் நிலக்கல் ஆகிய இடங்களில் தெர்மல் ஸ்கேனர் மூலம் பக்தர்கள் பரிசோதிக்கப் படுவார்கள். 65 வயதிற்கு மேல் உள்ளவர்களும், 10 வயதுக்குக் குறைவான குழந்தைகளும் சபரிமலை வர அனுமதி இல்லை. நெய் அபிஷேகம் செய்வதற்கு தனி இடம் ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

date