Skip to main content

கேரளாவில் இன்று 62 பேருக்கு கொரானோ தொற்று: முதல்வர் பினராய் விஜயன் பேட்டி 

 

திருவனந்தபுரம், 

கேரள முதல்வர் பினராய் விஜயன் வெள்ளிக்கிழமை திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது: கேரளாவில் இன்று 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 33 பேர் வெளிநாடுகளில் இருந்தும்,  23 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும்  வந்தவர்கள் ஆவர்.  தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா 10 பேருக்கும், கர்நாடகா டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் இருந்து வந்த தலா ஒருவருக்கும் இன்று நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 

குரானா நோயாளியுடன் தொடர்பில் இந்த எண் மூலம் இன்று ஒருவருக்கு நோய் பரவியுள்ளது திருவனந்தபுரம், நெய்யாற்றின்கரை சிறையில் உள்ள 2 கைதிகளுக்கும், ஏர் இந்தியா விமான ஊழியர்கள் இருவருக்கும், ஒரு சுகாதாரத்துறை ஊழியருக்கும் இன்று நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இன்று 10 பேருக்கு நோய் குணமாகி உள்ளது. இதுவரை கேரளாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1150 ஆகும். தற்போது 577 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கொரோனா அறிகுறிகளுடன் 231 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இதுவரை 62, 746 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 60,448 பேருக்கு நோய் இல்லை என்று தெரியவந்துள்ளது. கேரளாவின் தற்போது பல்வேறு மாவட்டங்களிலாக 1,24, 167 பேர் கண்காணிப்பில் உள்ளனர்.  இதில் 1,23, 087 பேர் வீடுகளிலும், 1,080 பேர் மருத்துவமனையிலும் உள்ளனர். சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 11, 468 பேரின் உமிழ்நீர் மாதிரி பரிசோதித்ததில் 10,635 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இன்று கேரளாவில் மேலும் 22 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து கேரளாவில் நோய் தீவிரமுள்ள பகுதிகளின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது. நெய்யாற்றின்கரை சிறையில் உள்ள 2 கைதிகளுக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கண்ணூர் மாவட்ட சிறையில் உள்ள ஒரு கைதிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த சிறைகளில் உள்ள ஊழியர்கள் அனைவரும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த கைதிகளுடன் ஒன்றாக அடைக்கப்பட்டு இருந்த சக கைதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். புதிதாக கைதிகளைக் கொண்டு வரும்போது அவர்களை கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மையம் ஏற்படுத்தப்படும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இதுவரை மெடிக்கல் சர்வீஸ் கார்ப்பரேஷன் மூலம் ரூ.620 கோடியே 71 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அதில் 227 கோடியே 35 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 12,191 தனிமை படுக்கைகள் உள்ளன. அவற்றில் இப்போது 1,080 பேர் உள்ளனர். கேரளாவில் உள்ள 1,296 அரசு மருத்துவமனைகளில் 49, 702 படுக்கைகளும், 1,369 அவசர சிகிச்சை படுக்கைகளும், 1,045 வெண்டிலெட்டர்களும் உள்ளன. 866 தனியார் மருத்துவமனைகளில் 81,904 படுக்கைகளும், 6059 அவசர சிகிச்சை படுக்கைகளும், 1578 வெண்டிலேட்டர்களும் உள்ளன. கேரளா முழுவதும் 851 கொரோனா நல மையங்களும் உள்ளன. எனவே தற்போது நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. நோய் பாதிக்கப்பட்டவர் களிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாமல் இருக்க வேண்டும்.  இதற்காகத்தான் கூடுதல் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் அறிவுரையின்படி தேவையான பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. கேரளாவில் நடத்தப்பட்டுவரும் 100 பரிசோதனைகளில் 1.7 பேருக்குத்தான் நோய் உறுதி செய்யப்படுகிறது. 

தேசிய அளவில் இதன் சராசரி 5 ஆகும். கொரியாவில் இந்த சராசரி 2 ஆகும் . அதே போல மற்ற நாடுகளும் 2 சதவீதத்திற்கும் கீழ் குறைக்க முயற்சிக்கும் சமயத்தில்தான் நாம் இந்த சாதனையை படைத்துள்ளோம். இதுவரை மொத்தத்தில் 80,091 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. 10 லட்சம் பேருக்கு 2335 என்பதுதான் கணக்காகும். 71 பரிசோதனைகள் நடத்தும் போது தான் ஒருவருக்கு நோய் உறுதி செய்யப்படுகிறது. நமது நாட்டின் சராசரி படி பார்த்தால் இது 23 பேருக்கு 1 ஆகும். இதுவரை கேரளாவுக்கு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 1,33, 249 பேர் வந்துள்ளனர். இவர்களில் 73,421 பேர்  சிவப்பு மண்டலத்தில் இருந்து வந்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 1,16, 775 பேரும்,  வெளிநாடுகளில் இருந்து 16, 477 பேரும் வந்துள்ளனர். கேரளாவில் கொரோனா நோய் கண்டுபிடிக்கப்பட்டு 100 நாட்களுக்கு பின்னர் ஒரு நாள் மருத்துவமனையில் 16 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். ஆனால் தற்போது மருத்துவமனையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 577 ஆகும். நேற்று நோய் பாதிக்கப்பட்ட 84 பேரில் கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் 5 பேருக்கு மட்டுமே நோய் பரவியது. இந்த வாரக் கணக்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நோய் பாதிக்கப்பட்ட 53 பேரில் 5 பேருக்கும், திங்கட்கிழமை 49 பேரில் 6 பேருக்கும், செவ்வாய்க்கிழமை 67 பேரில் 7 பேருக்கும், புதன்கிழமை 40 பேரில் 3 பேருக்கும், இன்று 62 பேரில் ஒருவருக்கும் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. அதாவது இந்த வாரத்தில் இதுவரை 355 புதிய நோயாளிகளில் 27 பேருக்கு மட்டுமே கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது. மே 10ஆம் தேதி முதல் 23ம் தேதி வரை உள்ள கணக்கின் படி 289 புதிய நோயாளிகளில் 38 பேருக்கு மட்டுமே தொடர்பில் இருந்ததின்  மூலம் நோய் பரவியுள்ளது. மே 10ம் தேதி முதல் உள்ள மொத்தமுள்ள  644 நோயாளிகளில் 65 பேருக்கு தான் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது. இது 10.09 சதவீதமாகும்.  தற்போது  சிகிச்சையில் உள்ள 577 நோயாளிகளில் 45 பேருக்கு மட்டும்தான் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

date