கேரளாவில் இன்று 85 பேருக்கு கொரோனா தொற்று: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
திருவனந்தபுரம்,
கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா சனிக்கிழமை திருவனந்தபுரத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது: கேரளாவில் இன்று 85 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 15 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 14 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 12 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், தலா 9 பேர் ஆலப்புழா மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களையும், 8 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 7 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், தலா 4 பேர் இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா, கோட்டயம் மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 53 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 18 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். இன்று 10 பேருக்கு கொரோனோ நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இதில் கண்ணூர் மற்றும் மலப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா 4 பேரும், கோழிக்கோடு மற்றும் இடுக்கி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர்.
இன்று 4 சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நோய் பரவி உள்ளது. இவர்களில் 3 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், ஒருவர் கோழிக்கோடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இன்று 46 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இவர்களில் 10 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 9 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 7 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 6 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 4 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 3 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், தலா 2 பேர் கோட்டயம் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களையும், தலா ஒருவர் பத்தனம்திட்டா, இடுக்கி மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து கேரளாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,045 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1, 342 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலாக தற்போது 2,35, 418 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 2,33, 429 பேர் வீடுகளிலும், 1,989 பேர் மருத்துவமனையிலும் கண்காணிப்பில் உள்ளனர்.
இன்று கொரோனா அறிகுறிகளுடன் 223 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,170 மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 1,09,729 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் இன்னும் 3,223 மாதிரிகளின் முடிவுகள் வர உள்ளன. மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 29,790 பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 27,899 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது. இதுவரை மொத்தம் 1,44,842 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இன்று புதிதாக நோய் தீவிரமுள்ள பகுதிகளுக்கான பட்டியலில் 2 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பட்டியலில் இருந்து 13 இடங்கள் நீக்கப்பட்டுள்ளன. தற்போது கேரளாவில் 117 நோய் தீவிரமுள்ள பகுதிகள் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Log in to post comments